மகிந்த அரசாங்கத்தை கவிழ்த்து, இலங்கையின் ஆட்சியை மாற்றுவதற்காக எதிர்கட்சி மேற்கொள்கின்ற போராட்டங்கள் போதுமானவை அல்ல என்று, ஜே வி பி தெரிவித்துள்ளது.
பிலியந்தலவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜே வி பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்கடசி அரசாங்கத்துக்கு எதிராக தேசிய அளவில் எதிர்பார்ப்பாட்டங்களை நடத்த தவறியுள்ளது. இது வருத்தமளிக்கின்ற விடயமாக உள்ளது.
தற்போதுள்ள ஆட்சியை மாற்றுவதற்கு மேலும் பாரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், நாட்டையும், நாட்டு மக்களையும் ஒருவராலும் பாதுகாக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Responses to மகிந்த அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஐ.தே.க போராட்டங்கள் போதுமானதல்ல – ஜேவிபி