யுத்தக் குற்றங்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் தூதுவர் ஸ்டீவன் ஜே ரெப் எதிர்வரும் 6ம் திகதி முதல் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதா, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
அவர் இந்த மாதம் 11ம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருந்து அரச மற்றும் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களையும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதன் போது, அவர் இலங்கை அரசங்கம் தமது பொறுப்புக் கூறும் விடயத்தில் இருந்து விலகியுள்ள விதங்கள், மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க பரிந்துரைகளின் அமுலாக்கம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தவுள்ளார்.
ஏற்கனவே 2012ம் ஆண்டு அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் மாநாட்டில் பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்கு முன்னதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஸ்டீவன் ரெப் தற்போது, இரண்டாவது தடவையாக இலங்கைக் விஜயம் செய்கிறார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகின்ற மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள இலங்கைக்கு பிரேரணைக்கான தகவல்களை திரட்டுதல் மற்றும் அது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்காக அவர் இலங்கை வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Responses to யுத்தக் குற்றங்களை ஆராய அமெரிக்கத் தூதுவர் இலங்கை வருகை!!