“கழகப் பொதுக்குழு” என தவறான பிரச்சாரம் செடீநுது மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள விஷமத்தனத்தை அடுத்து,கழகத் தோழர்கள் கட்டுப்பாடு காக்க கடும் நடவடிக்கையும், எச்சரிக்கையும் விடுத்து திமுக தலைவர் கலைஞர் அவசர அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், “இனி ஒரு விதி செய்வோம்” என்ற தலைப்போடு மதுரை தோழர்கள் அன்பரசு, இளங்கோவன், கீரிப்பட்டி செந்தில் ஆகியோருடைய பெயரில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கலைஞர் அரங்கத்தில், ஜனவரி 30, 2014 என்ற தேதியில் நடைபெறுவதாக போலி வண்ணச்சுவரொட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது, என் பார்வைக்கும், பொதுச் செயலாளர் பேராசிரியர் பார்வைக்கும் வந்தது.
தி.மு.க. பொதுக்குழு ஜனவரி 30, கலைஞர் அரங்கத்தில் நடைபெறுவதாக அந்தச் சுவரொட்டியில் விளம்பரப் படுத்தியிருப்பதையும், அந்தச் சுவரொட்டியை ஒட்டி வேறுபல கருத்துக்கள் விஷமத்தனமாக அச்சிடப்பட்டு மதுரை மாநகரில் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விஷமத்தனமான செயலை கழகத்திற்கு அவப்பெயர் உருவாக்க வேண்டும் என்பதற்காகவே செய்திரு க்கிறார்கள் என்று கருதவேண்டியுள்ளது. ஏனென்றால் 15.12.2013 அன்று நடந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ளாத மு.க.அழகிரியின் படமும், சுவரொட்டி விளம்பரத்தில் இணைக்கப்பட்டிருப்பது விஷமத் தனமானதும்,
விஷக்கருத்தை தி.மு.கழகத்தின் மீது பரப்புவதற்கு சிலர் செய்த திட்டமிட்ட சதி என்றும், கடமை -கண்ணியம் - கட்டுப்பாடு போற்றி வளர்ந்து வரும் இந்தக் கழகத்துக்கு நாடாளுமன்றத் தேர்தல் நேரம் பார்த்து நஞ்சு கலக்கும் செயல் என்றும் நான் கருதுவதாலும் இந்த விபரீதச் செயலில் ஈடுபட்டவர்கள் கழகத்தை உயிராகக்கருதும் என் போன்றவர்களின் மனத்தையும்,
கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் மனத்தையும் புண்படுத்துவதாலும், உடனடியாக அவர்களின் விரும்பத்தகாத இச்செயலுக்கு மன்னிப்புக் கேட்டு அதனை வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டால் அவர்கள் கழகத்திலிருந்தே நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று கலைஞர் எச்சரித்துள்ளார்.

0 Responses to மதுரையில் விஷமத்தனம் - எச்சரிக்கை விடுத்து கலைஞர் அவசர அறிக்கை