Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் போனோர் தொடர்பினில் நேரடி சர்வதேச விசாரணைகளே தேவையன்றி மஹிந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள இழுத்தடிப்பு விசாரணைக்குழுக்களல்ல என தெரிவித்துள்ளார் வடமாகாணசபையின் கூட்டமைப்பு பெண் அங்கத்தவரும் காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன்.

யாழ்.ஊடக அமையத்தினில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டினில் மேலும் அவர் தெரிவிக்கையினில் காணாமல் போனோர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க மஹிந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள இழுத்தடிப்பு விசாரணைக்குழு தனது பணிகளை மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இத்தகைய அமைப்புக்கள் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்றது.இவை வெறும் கண்துடைப்புக்களே என்பது அனைவருக்கும் தெரியும்.

இலங்கை அரசை பொறுத்த வரையினில் இவ்வாறு விசாரணை குழுக்களை அமைப்பதில் அலாதி விருப்பமிருக்கின்றது.ஆனால் அவ்வாறு அமைக்கப்படும் குழுக்கள் என்ன செய்கின்றன என்றோ அவற்றினது அறிக்கைகளிற்கு என்ன நடந்தது என்பது பற்றியோ தெரியாது.

ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவிற்கு மக்கள் திரண்டு வாக்குமூலங்களை அளித்திருந்தனர்.இப்போதைய விசாரணைக்குழு தொடர்பினில் எமக்கு அக்கறையற்றிருக்கின்ற போதும் நாம் ஒத்துழைப்பு வழங்கவில்லையென இந்த அரசு கூறுவதை தவிர்க்கவே இதுவரை 11ஆயிரம் காணாமல் போனோர் விபரங்களை பதிவு செய்துள்ளோம்.

இனியும் இத்தகைய இழுத்தடிப்புக்களிற்கு விட்டுக்கொடுக்க முடியாது.தேவையாயின் முதலில் அரசு காணாமல் போனோர் பற்றி தெளிவான முடிவை அறிவிக்க காலக்கெடு ஒன்றை தரட்டுமெனவும் தெரிவித்தார்.

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் தான்; இணையப்போவதாக எழுந்துள்ள செய்திகள் பற்றி கருத்து வெளியிட்ட அவர் இத்தகைய வதந்திகள் பற்றி தான் அக்கறை கொள்ளவில்லையென தெரிவித்தார்.தேர்தல் காலத்திலும் பல வதந்திகள் கட்டிவிடப்பட்டன.ஆனால் மக்கள் அதை பொருட்படுத்தவில்லை.

ஆனாலும்  நான் என்ன கோரிக்கைகளை முன்வைத்து தேர்தல்களத்தினில் குதித்து வெற்றியீட்டினேனோ அவற்றை நிறைவேற்றிய பின்னர் அரசியலிலிருந்து ஓதுங்கிவிடுவேன்.அதனால் நான் கதிரைகளை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கப்போவதாக எவரும் அச்சப்பட வேண்டாமெனவும் தெரிவித்தார்.

காணாமல் போனோர் தொடர்பினில் நேரடி சர்வதேச விசாரணைகளே தேவையன்றி மஹிந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள இழுத்தடிப்பு விசாரணைக்குழுக்களல்ல என தெரிவித்துள்ளார் வடமாகாணசபையின் கூட்டமைப்பு பெண் அங்கத்தவரும் காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன்.

யாழ்.ஊடக அமையத்தினில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டினில் மேலும் அவர் தெரிவிக்கையினில் காணாமல் போனோர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க மஹிந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள இழுத்தடிப்பு விசாரணைக்குழு தனது பணிகளை மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இத்தகைய அமைப்புக்கள் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்றது.இவை வெறும் கண்துடைப்புக்களே என்பது அனைவருக்கும் தெரியும்.

இலங்கை அரசை பொறுத்த வரையினில் இவ்வாறு விசாரணை குழுக்களை அமைப்பதில் அலாதி விருப்பமிருக்கின்றது.ஆனால் அவ்வாறு அமைக்கப்படும் குழுக்கள் என்ன செய்கின்றன என்றோ அவற்றினது அறிக்கைகளிற்கு என்ன நடந்தது என்பது பற்றியோ தெரியாது.

ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவிற்கு மக்கள் திரண்டு வாக்குமூலங்களை அளித்திருந்தனர்.இப்போதைய விசாரணைக்குழு தொடர்பினில் எமக்கு அக்கறையற்றிருக்கின்ற போதும் நாம் ஒத்துழைப்பு வழங்கவில்லையென இந்த அரசு கூறுவதை தவிர்க்கவே இதுவரை 11ஆயிரம் காணாமல் போனோர் விபரங்களை பதிவு செய்துள்ளோம்.

இனியும் இத்தகைய இழுத்தடிப்புக்களிற்கு விட்டுக்கொடுக்க முடியாது.தேவையாயின் முதலில் அரசு காணாமல் போனோர் பற்றி தெளிவான முடிவை அறிவிக்க காலக்கெடு ஒன்றை தரட்டுமெனவும் தெரிவித்தார்.

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் தான் இணையப்போவதாக எழுந்துள்ள செய்திகள் பற்றி கருத்து வெளியிட்ட அவர் இத்தகைய வதந்திகள் பற்றி தான் அக்கறை கொள்ளவில்லையென தெரிவித்தார்.தேர்தல் காலத்திலும் பல வதந்திகள் கட்டிவிடப்பட்டன.ஆனால் மக்கள் அதை பொருட்படுத்தவில்லை.

ஆனாலும்  நான் என்ன கோரிக்கைகளை முன்வைத்து தேர்தல்களத்தினில் குதித்து வெற்றியீட்டினேனோ அவற்றை நிறைவேற்றிய பின்னர் அரசியலிலிருந்து ஓதுங்கிவிடுவேன்.அதனால் நான் கதிரைகளை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கப்போவதாக எவரும் அச்சப்பட வேண்டாமெனவும் தெரிவித்தார்.

0 Responses to காணாமல் போனோர் விவகாரத்தினில் நேரடி சர்வதேச விசாரணை வேண்டும் -அனந்தி!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com