Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக - இலங்கை மீனவ பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தைக்குப் பின்னரே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா செனவிரத்ன கூறியுள்ளார்.

டெல்லி வரும் முன்னர் கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த ரஜிதா, தமிழக முதல்வர் கூறியிருப்பது போல இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் நாளை முதல் விடுவிக்கப் பட மாட்டார்கள் என்றும், இலங்கை-தமிழக மீனவர்கள் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர்தான் விடுவிக்கப் படுவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், டெல்லி வந்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவாரை சந்திக்க உள்ளனர் என்றும், இந்த இலங்கை அமைச்சக குழு, 14ம் திகதி சரத் பவாரை சந்தித்து பேச, அவரது அமைச்சகம் நேரம் ஒதுக்கி கொடுத்து உள்ளது என்றும் தெரிய வருகிறது.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் வருகிற 13ம் திகதி விடுதலையாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். மேலும் தமிழக சிறையில் இருக்கும் இலங்கை மீனவர்களும் விரைவில் விடுவிக்கப் படுவார்கள் என்றும் கூறியிருந்தார் என இந்திய தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன!

0 Responses to பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தமிழக மீனவர்கள் விடுவிக்கப் படுவார்கள்: இலங்கை அமைச்சர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com