வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மோதல்கள் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியற்கைதிகள் பல ஆண்டுகளாக எந்தவித நீதி விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் அரசியற்கைதிகளில் விடுதலை குறித்து தமிழ் அரசியல் கட்சிகள், உறவினர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்கள் அரசாங்கத்திடம் தொடர்ந்தும் முறையிட்டு வருகின்றன. ஆனாலும், அது தொடர்பிலான நடவடிக்கைகள் இன்னமும் எடுக்கப்படவில்லை.
இதனிடையே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது, தமிழ் அரசியற்கைதிகளின் விடுதலை குறித்து வடக்கு முதலமைச்சரினால், ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது.
அதன்போது, தமிழ் அரசியற்கைதிகள் விவகாரம் சட்டரீதியானது என்பதால் அதன் பிரகாரம் தீர்த்து வைக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார். ஆனாலும், எந்தவித முன்னேற்றமான செயற்திட்டங்களும் இன்றுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த நிலையிலேயே, வடக்கு மாகாண முதலமைச்சர் மகஸின் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியற்கைதிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரன் மகஸின் சிறைச்சாலைக்கு விஜயம்; தமிழ் அரசியற்கைதிகளுடன் பேச்சு