யாழ். மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற ஒரு இடம் இல்லை. மக்களுடைய காணிகள் படிப்படியாக அவர்களிடமே ஒப்படைக்கப்படும் என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார். இதேவேளைஇ யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளையும் விரைவில் இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி உணவத்தை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்,
'யாழ். மாவட்டத்திலுள்ள சிறிய இராணுவ முகாம்களைத் தற்பொழுது அகற்றி வருகின்றோம். இதேபோல் எதிர்காலத்தில் மக்களுடைய காணிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களையும் விடுவித்து மக்களை மீள்குடியேற்றவும் நடவடிக்கை எடுப்போம். யாழ். மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இங்கு இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற இடங்களாக எதுவுமில்லை. மக்களுடைய காணிகளை படிப்படியாக விடுவிப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்டத்தினுடைய பாதுகாப்பிற்காகவே இங்கு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் மக்களுடைய பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இராணுவத்தினர் விசேட செயற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இருந்தாலும் நாம் மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்' எனத் தெரிவித்துள்ளார்.
அதிர்வு.
அதிர்வு.
அதிர்வு.
அதிர்வு.
0 Responses to யாழில் உள்ள இளைஞர்களை படையில் சேர்க்க உள்ளேன்: உதய பெரேரா!