Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி 09 ஆவது தடவையாக இன்று சனிக்கிழமை, மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்ட போது மேலும் மூன்று மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் 39 மனிதர்களின் மண்டை ஓடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று கண்டுபிடுக்கப்பட்ட மண்டை ஓடு ஒன்றின் வாய் அகலத் திறந்துள்ளது. இதனைப் பார்த மருத்துவர்கள் இன் நபர் , கடும் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்கள். இங்கே உடைந்த காப்புகளோடு மற்றும் நகை அணிந்த மண்டை ஓடு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்றும் அடுக்கு அடுக்காக இங்கே மண்டை ஓடுகளும் எலும்புகளும் காணப்படுவதாக தோண்டுபவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதாவது இவர்களை கொலைசெய்தவர்கள், முதலில் கொஞ்சப்பேரை கொலைசெய்து குழிக்குள் தள்ளிவிட்டு மண்ணை போட்டு மூடி, பின்னர் சிலரைக் கொலைசெய்து விட்டு மண்ணைப் போட்டு மூடியுள்ளார்கள். இதன் காரணமாகவே , மனித எலும்புக்கூடுகள், அனைத்தும் மண்ணுக்கு அடியில் ஒரே மட்டத்தில் இல்லை. சுமார் 3 பிரிவுகளாக இவர்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

இவர்களில் பலர், கொல்லப்படுவதற்கு முன்னர் கடும் சித்திரவதைகளை அனுபவித்துள்ளார்கள் என மருத்துவர்களும் ஆராட்சியாளர்களும் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் அவர்கள் நேரடியாக ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். தோண்டப்படும் வேளை அங்கே இராணுவத்தினரும் பொலிசாரும் பெருமளவில் நின்று நிலமையை அவதானித்து வருகிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். பெண்கள், சிறுவர்கள் , மற்றும் ஆண்கள் என்று இதுவரை 39 மணித எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இப் புதைகுழிக்குள் மேலும் எலும்புக் கூடுகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதிர்வு.

0 Responses to இராணுவத்தின் சித்திரவதையின் உச்சக்கட்டமா ? வாய் அகல திறந்தபடி மண்டை ஓடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com