Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நடந்தது இன அழிப்பே. அது இன்று வரை தொடர்வதாக தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன். யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்த  போர்க ;குற்றங்களிற்கான அமெரிக்க அரசின் ஆலோசகர் ஸ்ரீபன் ரெப்பினை அவர் யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றினில் இன்று மாலை சந்தித்து உரையாடியிருந்தார். அச்சந்திப்பினில் இலங்கைக்கான அமெரிக்க தூதரும் பிரசன்னமாகியிருந்தார்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட அனந்தி சசிதரன் இலங்கையினில் நடந்தது இன அழிப்பே. அது இன்று வரை தொடர்வதாக அவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தேன். இறுதி யுத்த காலப்பகுதியினில் இடம்பெற்ற மனித பேரழிவு எவ்வாறு இலங்கை அரசினால் அரங்கேற்றப்பட்டதென்பது பற்றியும் அதன் அவலங்கள் பற்றியும் இன்று வரை காணாமல் போனோரது குடும்பங்கள் எதிர்கொள்ளும் துன்பியல் வாழ்வு பற்றியும் எடுத்துக் கூறியிருந்தேன்.

குறிப்பாக தற்;போது இன இழிப்பு எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றதென்பதை சுட்டிக்காட்டியதுடன் காணாமல் போனோர் விடயத்தினில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டியதன் தேவை பற்றியும் பிரஸ்தாபித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக இன்றும் பாதுகாப்பற்ற சூழலினிலேயே நாம் வாழ வேண்டியிருக்கின்றது.

அத்துடன் இன அழிப்புக்கு தொடர்கின்ற நிலையினில் இன்று வரை இயல்பு வாழ்க்கை ஒன்றினை தமிழ் மக்கள் வாழ முடியாதிருக்கும் நெருக்குவாரம் தொடர்கின்றது. அது பற்றி பிரஸ்தாபித்ததுடன் ஆக்கபூர்வமாக வகையினில் அவர் முதலில் இயல்பு வாழ்க்கையினை வாழ வழிவகைகளை ஏற்படுத்தி வழங்க உரிய அழுத்தங்களை இலங்கை அரசு மீது பிரயோகிக்க கேட்டுக்கொண்டதாகவும் அவர்  தெரிவித்தார்.  தாம் ஆக்கபூர்வமான சில முயற்சிகளினில் ஈடுபட்டிருப்பதாக நம்பிக்கை ஊட்டக்கூடிய சில தகவல்களை அமெரிக்க பிரதிநிதிகள்  தெரிவித்திருந்ததாகவும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.

0 Responses to நடந்ததும் இன அழிப்பு..தொடர்வதும் இன அழிப்பே!! அனந்தி சசிதரன் சீற்றம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com