இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
ஹாபர் சவுத் ஏசியா (khabar South Asia) செய்திச்சேவைக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்ட பதிலை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்தின் பேரிலேயே இலங்கை- இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை அரசாங்கம், இந்திய மத்திய அரசாங்கத்திடம் உதவியைக் கோரியது. பதிலுக்கு இந்தியாவில் நடைமுறையிலுள்ளது போன்று மத்திய அரசாங்கம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை கையளிக்கும் என்று இலங்கையினால் உறுதி வழங்கப்பட்டது
அத்தோடு, இலங்கை இறைமையுள்ள நாடு. தமது நாட்டை பற்றி அவர்களே தீர்மானிப்பார்கள். அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தினூடு, தமிழ் உள்ளிட்ட அனைத்து இனங்களும் கௌவரவத்துடன் வாழும் உரிமை வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது சல்மான் குர்ஷித் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to இலங்கை - இந்திய ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டும் : சல்மான் குர்ஷித்