Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரஷ்யாவின் சோச்சி நகரில் தொடங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் தமது தேசியக் கொடியின் கீழ் அணிவகுப்பில் கலந்து கொள்ள முடியாத நிலைமை தோன்றியுள்ளது.

இந்திய ஒலிம்பிக் கமிட்டியில்  அரசியல் பிரமுகர்களின் ஆதிக்கம், ஊழல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடும் அதிருப்தி அடைந்தததுடன் இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் கடந்த 20102 டிசம்பர் மாதம் தொடர்பில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கும் இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கும் இடையில் பாரிய முறுகல் நிலை தொடர்ந்து வந்தது. தொடர் அழுத்தத்திற்கு பணிந்த இந்திய ஒலிம்பிக் கமிட்டி தனது அமைப்பை முற்றாக கலைத்து புதிதாக தேர்தல் நடத்த ஒப்புக் கொண்டது.

ஆனால், 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் இத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய இந்திய ஒலிம்பிக் கமிட்டி உருவாக்கப்படாத பட்சத்தில் குறித்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது இந்திய அணி வீரர்கள்  ஒலிம்பிக் கொடியின் கீழ் தனி வீரர்களாகவே கலந்து கொள்ள முடியும், இந்திய தேசியக் கொடியின் கீழ் போட்டியிட முடியாது என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

எதிர்வரும் பெப்ரவரி 7ம் திகதிக்குள் இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைத்திருக்கும். ஆனால், இரண்டு நாட்கள் கழித்து பெப்ரவரி 9ம் திகதியே தேர்தலை நடத்துவதற்கு இந்திய ஒலிம்பிக் கமிட்டி தீர்மானித்துள்ளது. இந்த இரு நாட்கள் தாமதத்தால், இந்திய அணி வீரர்க்ளுக்கு குளிர்கால ஒலிம்பிக் அணிவகுப்பில் தேசியக் கொடியின் கீழ் வலம் வரும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

இது குறித்து இந்தியாவின் துப்பாக்கிச்சுடும் வீரர் ஷிவா கேஷவன் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவின் விளையாட்டுத்துறையில் நிலவும் ஊழல், பலவீனமான ஆளுமை  குறித்து உலகம் முழுவதும் தெரிந்திருக்கிறது. இந்திய தேசியக் கொடியின் கீழ் நாம் அணிவகுப்பில் கலந்து கொள்ள முடியாதது, எனக்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைகுனிவாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

இதேவேளை இந்திய ஒலிம்பிக் கமிட்டி இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், மறு தேர்தலை அவசரமாக நடத்தி முடிக்க முடியாது. தேர்தல் திகதியை மாற்றுவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி தேர்தலை ஒரு சிலர் மாத்திரம் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதையோ, ஊறுவிளைவிப்பதையோ அனுமடிக்க முடியாது என தெரிவித்துள்ளது.

0 Responses to ரஷ்ய குளிர்கால ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியின் கீழ் அணிவகுப்பு இல்லை?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com