Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விசேட பிரதானிகள் (வி.ஐ.பி), அதிவிசேட பிரதானிகள் (வி.வி.ஐ.பி) என்று அடையாளப்படுத்தும் ஒட்டுத்துண்டுகளை (ஸ்டிக்கர்கள்) வாகனங்களில் காட்சிப்படுத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (ஜனவரி 06) முதல் குறித்த தடை அமுலுக்கு வருவதாகவும், நிறக்கண்ணாடிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் செலுத்தப்படுவதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண கருத்து தெரிவித்தார்.

போதை பொருட்களை கடத்துதல் மற்றும் கசிப்பு கொண்டு செல்லல் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட முறைகேடான செயற்பாடுகளுக்கு போலி அடிப்படையில் இந்த ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வாகனங்களில் ஒட்டி பயணிக்க கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இது வாகன போக்குவரத்திற்கு முற்றுமுழுதாக சட்டவிரோதமான செயற்பாடாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வாகனத்தின் 'வின்ஸ் க்ரீன்' பகுதி முழுமையாக கறுப்பு நிறத்தினால் மறைத்து வைக்கப்பட கூடாது. ஒளி வாகனத்திற்குள் தெரியக்ககூடியவாறு சாரதியினை இனங்காண கூடியவாறு வாகனங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாத சந்தர்ப்பங்களில் பல்வேறுப்பட்ட மோசாடிகள் இடம்பெறுகின்றன. இவ்விரு சட்டங்களை நாம் தீவிரமாக அமுல்படுத்த தீர்மானித்துள்ளோம். இது தொடர்பில் நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிற்கும் அறிவித்துள்ளோம். இவற்றை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் என அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

0 Responses to வாகனங்களில் வி.ஐ.பி, வி.வி.ஐ.பி ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்குத் தடை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com