பிராஸ்ன் அதிபர் பிரன்ஸுவாஸ் ஹாலந்துக்கும் நடிகை ஜூலியா காயெத்துக்கும் இடையிலான இரகசியத் தொடர்பு கடந்த இரு வருடங்களுக்கு மேலாக இருந்து வருவதாக புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது குளோசர் சஞ்சிகை.
பிரான்ஸ் அதிபரின் பாட்னராகவும் பிரான்ஸின் முதற் பெண்மணியாகவும் வலெரி திரியெர்வெய்லர் இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஜூலியா காயெத்தை, பிரன்ஸுவாஸ் ஹாலந்து இரகசியமாக மோட்டார் சைக்கிளில் சென்று சந்தித்து வந்த விவகாரத்தை புகைப்படங்களுடன் போட்டுடைத்தது குளோசர் சஞ்சிகை. இதையடுத்து ஹாலந்து மீதான சர்ச்சை அதிகரித்தது.
இத்தகவல்களால் அதிர்ச்சியடைந்த வலெரி திரியெர்வெய்லர் தன்னால் மன உளைச்சலை தாங்க முடியவில்லை என மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அனுமதி பெற்று இருந்து வருகிறார்.
இத்தனைக்கும் பிரன்ஸுவாஸ் ஹாலந்து ஒரு முறை கூட மருத்துவமனைக்கு நேரடியாக சென்று திரியெர்வெய்லரை சந்திக்கவில்லை. பூங்கொத்து அனுப்பியதோடு சரி என தகவல் வெளிவர உடனடியாக அதனை மறுத்திருந்த வலெரி திரியெர்வெய்லர், மருத்துவர்கள் தான் பிரான்ஸ் அதிபரை இந்தச் சூழ்நிலையில் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தியிருந்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் குளோசர் சஞ்சிகை வெளியிட்ட புதிய தகவல்களின் படி, 41 வயதான ஜூலியா காயெத்தை அடிக்கடி சந்திக்கும் பொருட்டு மேற்கு பாரீஸில், தனது இரண்டாவது சொந்த மாடிக் குடியிருப்பை பிரன்ஸுவாஸ் ஹாலந்து பயன்படுத்தி வந்ததாகவும், சில வார இறுதி தினங்களில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தாகவும், கடந்த வருடம் கிரீஸில் தமது விடுமுறையை கழிக்கும் பொருட்டு திரியெர்வெய்லருடன் பிரன்ஸுவாஸ் ஹாலந்து செல்வதை தவிர்த்துக் கொண்டதற்கும், ஜூலியாவுடனான தொடர்பே காரணம் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் இம்முறை புதிய புகைப்பட ஆதாரங்கள் எதனையும் குளோசர் சஞ்சிகை வெளியிடவில்லை. இதேவேளை தனது அந்தரங்க விடயங்களில் தேவையில்லாமல் தலையிட்டு தனது பெயரை கெடுத்துவிட்டதாக கூறி நடிகை ஜூலியா காயெத் குளோசர் சஞ்சிகை மீது 54,000 யூரோக்கள் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில் இவ்வழக்கின் தீர்ப்பை குளோசர் சஞ்சிகை தனது முகப்பு பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்பது நியதி.

0 Responses to பிரான்ஸ் அதிபர் - நடிகை ஜூலியா காயெத் இரு வருடங்களுக்கு மேல் இரகசிய தொடர்பு?