Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புகழ் பெற்ற இந்திய நடிகை சுசித்ரா சென் தனது 82 ஆவது வயதில் காலமானார்.
மார்பு நோய் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரின் உடல்நிலை வியாழனன்று மோசமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வங்காள மொழி திரையுலகின் ஒரு முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்த சுசித்ரா சென், 'தேவதாஸ்' மற்றும் 'ஆந்தி' உட்பட பல ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

வங்காள திரையுலகில் உத்தம் குமாருடன் இவர் ஜோடியாக நடித்த படங்கள் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று, இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வங்காள திரையுலகில் இவர்கள் பிரபலமான ஜோடியாக வலம் வந்தனர்.

1978ஆம் ஆண்டில் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஓய்வுபெற்ற இவர் அதற்கு பிறகு பொது வாழ்க்கையிலிருந்தும் விலகினார். தனது உறவினர்களைத் தவிர வேறு எவரையும் பார்க்க மறுத்து இவர் துறவி போல வாழ்ந்து வந்தார் என்று கூறப்படுகின்றது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான நிரந்தரமான திரைஜோடிகளில் எப்போது ஒரு பாதியாகத் திகழ்ந்த சுசித்ரா சென் பல நடிகர்கள் செய்யாத வகையில், நட்சத்திர அந்தஸ்தை மறுவரையறை செய்துள்ளார் என்று திரை விமர்சகர் சாய்பல் சாட்டர்ஜீ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்
.
வங்காள திரையுலகை இவரும் உத்தம் குமாரும் வலம் வந்த இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், இவர் ஹாலிவுட் நடிகை கெரட்டா கர்போ போல பொது வாழ்க்கையிலிருந்து விடைபெற்றது அவரது வசீகரத்தை மேலும் அதிகப்படுத்தியது என்றும் சாய்பல் சாட்டர்ஜீ கூறினார்.

" அவரிடம் ஒரு அடக்கி வாசித்த கவர்ச்சி இருந்தது. இதனுடன், அவரிடம் காணப்பட்ட பெண்மைத் தன்மை மிகுந்த கவர்ச்சி, உணர்ச்சிக் குவியல், ஆளுமை மிகுந்த ஈர்ப்புத் தன்மை ஆகியவை எல்லாம் சேர்ந்து, அவருக்கு ஈடாக இந்திய சினிமாவில் வேறு எவரும் இல்லை என்ற அளவிற்கு மற்றவர்களை அவர் விஞ்ச வைத்தது,” என்றார் சாய்பல் சாட்டர்ஜீ.

1953ஆம் ஆண்டில் உத்தம் குமாருடன் சேர்ந்து நடித்த ‘ஷேர் சௌட்டர்’ ( எழுபத்தி நான்கரை) என்ற மிகவும் பிரபலமான நகைச்சுவை திரைப்படம் மூலம் இவர் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

1959ஆம் ஆண்டில் ‘தீப் ஜுவல்லே ஜாய்’ என்ற திரைப்படத்தில், ஆண் மனநோயாளிகளுடன் நெருங்கிய உறவை வளர்க்க மனநல மருத்துவரிடம் பணியாற்றும் மருத்துவ உதவியாளராக சுசித்ரா நடித்த வேடம் தான் அவருடைய மிகச் சிறந்த வேடம் என்று கருதப்படுகிறது.

பெண்மானின் கண்களையுடைய, கறுமை நிறம் கொண்ட இவர் வங்காளத்தின் மிக பெரிய நட்சத்திரம் என்று இவரை மறைந்த ஹிந்தி நடிகர் தேவ் ஆன்ந்த் வர்ணித்திருந்தார்.
சுசித்ராவின் மகள் நடிகை மூன் மூன் சென், அவருடைய பேத்திகள் ரியா சென் மற்றும் ராய்மா சென் ஆகியோரும் இருக்கின்றனர். பேத்திகளும் திரை நட்சத்திரங்கள்தான்.


- நன்றி பிபிசி

0 Responses to புகழ்பெற்ற இந்திய நடிகை சுசித்ரா சென் காலமானார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com