அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை கையாளும் தூதுவரும், நீதிபதியுமான ஸ்டீபன் ஜே ரெப்பின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்துக்கு முன்னாலேயே இன்று வியாழக்கிழமை முற்பகலில் குறித்த ஆர்ப்பாட்ட போராட்டம் இடம்பெற்றது. இதன்போது, இலங்கையின் இறைமையிலும், உள்நாட்டு விவகாரங்களிலும் தலையீடு செய்வதை நிறுத்து, அமெரிக்கா புரிந்த போர்க்குற்றங்களை முதலில் விசாரணை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தாங்கிய காட்சி அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
மோதல்களுக்குப் பின்னரான இலங்கையின் நல்லிணக்கத்துக்கான ஏற்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் முன்னேற்றமில்லை என்று அதிர்ப்தி வெளியிட்டுள்ள அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர தீர்மானித்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை கையாளும் தூதுவரும், நீதிபதியுமான ஸ்டீபன் ஜே ரெப்பின் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க விசேட பிரதிநிதியின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்