இந்தியன் முகாஜிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாசின் பட்கலை விடுவிக்க தீவிரவாதிகள் பல்வேறு வகையிலும் முயற்சித்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட யாசின் பட்கலை விடுவிக்க வேண்டும் என்று, இந்தியன் முகஜிதீன் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி வருவதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை கடத்துவது, அல்லது குடியரசுத் தினத்தன்று நாட்டை சீர்குலைக்கத் திட்டமிட்டு இருப்பது என்று தீவிரவாதிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், இதனால் பாதுகாப்பை அதிகப் படுத்தும் படியும் மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதை அடுத்து டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு, தற்போது விமான நிலையத்தினுள் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டு வருகிறது என்றும் தெரிய வருகிறது.
0 Responses to யாசின் பட்கலை விடுவிக்க தீவிரவாதிகள் முயற்சி செய்து வருவதாக உளவுத் துறை எச்சரிக்கை!