வெனிசுலாவில் அந்நாட்டு அதிபர் நிக்கொலஸ் மடூறோவின் ஆதரவாளர்களுக்கும் எதிரானவர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் கிளர்ச்சியில் சனிக்கிழமை கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு கராக்காஸ் பகுதியில் அதிகளவு கூடி கிளர்ச்சி நடத்திய எதிரணியினருக்குத் தற்போது சிறையில் இருக்கும் கராக்காஸின் முன்னால் ஆளுனர் லோப்பெஸ்ஸின் மனைவி லிலியானா தலைமை தாங்கினார்.
இந்நிலையில் 3 அமெரிக்க இராஜ தந்திரிகளை வெளியேற்றிய சில நாட்களுக்குள்ளாகவே வெனிசுலா அதிபர் நிக்கொலஸ் மடூறோ தனது நாட்டில் இடம்பெறும் கிளர்ச்சியை அடக்க அமெரிக்க அதிபர் ஒபாமவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் அமெரிக்கா தனது உள்நாட்டு விவகாரங்களில் அதிகம் தலையிடுகின்றது என அதிபர் மடூறோ குற்றம் சாட்டி வந்த நிலையில் இந்த அழைப்பை விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வெனிசுலா கிளர்ச்சியினால் மேற்கு மாநிலமான டாச்சிராவில் பதற்ற நிலை அதிகரித்துள்ளதுடன் அங்கு தனது துருப்புக்களை இன்னும் அதிகளவு அனுப்புவதற்கு அரசு முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

0 Responses to வெனிசுலா மக்கள் கிளர்ச்சியில் 10 பேர் பலி:ஒபாமாவின் உதவியை நாடும் வெனிசுலா அதிபர் நிக்கொலஸ் மடூறோ