Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 18.02.2014

பதிந்தவர்: ஈழப்பிரியா 18 February 2014

மேஷம்
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

ரிஷபம்
எதிர்கால வெற்றிக்கு அடித்தளமிடும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வீண்பழி சுமத்தியவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழிலுக்கு மங்கையர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும். உதிரி வருமானம் பெருகும்.

மிதுனம்
வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும் நாள். தொலை தூரத்தில் இருந்து நல்ல தகவல் வந்து சேரலாம். பெற்றோர்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறலாம்.

கடகம்
சகோதர வழியில் சகாயம் கிடைக்கும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். அடுத்தவர்கள் நலன் கருதி அதிக அக்கறை எடுப்பீர்கள். வியாபார விருத்தி ஏற்படும். பயணத்தால் பலன் உண்டு.

சிம்மம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும். அஞ்சல் வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். கனவு பலிதம் உண்டு. அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

கன்னி
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையலாம்.

துலாம்
கோரிக்கைகள் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு ஏற்பட்டிருந்த தடைகள் அகலும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். வி.ஐ.பி.க்களின் வருகையால் விருப்பங்கள் நிறைவேறும்.

விருச்சகம்
வருமானம் இருமடங்காகும் நாள். எந்தக் காரியமும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். மாலை நேரத்தில் மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும்.

தனுசு
ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். புதிய தொழில் தொடங்க திட்டம் தீட்டுவீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

மகரம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறி ஏற்றம் பெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெம்பும், உற்சாகமும் பிறக்கும். சொந்தபந்தங்கள் வருகை அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

கும்பம்
சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் காண வேண்டிய நாள். புதிய பொறுப்புகளால் அலைச்சல் அதிகரிக்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம்.

மீனம்
பிரிந்தவர்கள் இணையும் நாள். பிரபலமானவர்களின் வருகையால் பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும். விலகிச்சென்ற வரன்கள் விரும்பி வந்து சேரும். ஆடை ஆபரணச்சேர்க்கை உண்டு.

0 Responses to இன்றைய ராசி பலன் | 18.02.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com