Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாளை பேரறிவாளன் தாக்கல் செய்து இருந்த மனுவின் மீதான இறுதித் தீர்ப்பு நாளை வெளியாக உள்ள நிலையில், முருகன், பேரறிவாளன், சாந்தன் இவர்களின் தூக்கு தண்டனை ரத்தாகுமா  என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் உறுதிப் செய்யப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட கைதிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய  மூவருமாவர்கள். இவர்களின் கருணை மனுக்களை மிகத் தாமதமாக குடியரசுத் தலைவர் நிராகரித்தது தொடர்பாக பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் பட்டது. இதற்கான விசாரணையும் முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் மீதான கருணை மனுவும் மிகத் தாமதமாக நிராகரிக்கப் பட்ட நிலையில், அவர்கள் மீதான தூக்கு தண்டனை ரத்தானது. அது போல இவர்கள் மூவரின் தூக்கு தண்டனையும் ரத்தாகும என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

0 Responses to முருகன், பேரறிவாளன்,சாந்தன் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுமா? - நாளை தீர்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com