Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடகொரியப் பிரஜைகள் அந்நாட்டு அரசால் அனுபவித்து வரும் கொடுமைகள் மற்றும் அங்குள்ள சிறைகளில் பாரியளவில் அரங்கேறி வரும் மனித உரிமை மீறல்கள் தற்போது ஊடகக் கவனம் பெற்று வருகின்றன.

மேலும் இச் சித்திரவதைகள் குறித்து ஐ.நா தனக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் ஒரு அறிக்கையை விரைவில் உலகுக்கு வெளியிட உள்ளது.

வடகொரியாவில் மனித உரிமை வல்லுனர்கள் சுமார் ஓராண்டு கால விசாரணைக்குப் பின்னர் இக் கொடுமைகள வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடகொரிய சிறைகளில் அடைக்கப்படவர்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளில் முக்கியமாகத் திட்டடமிடப் பட்ட கொலைகள், சித்திரவதை, கற்பழிப்பு, வலுக்கட்டாய கருக்கலைப்பு மற்றும் பட்டினி போடுதல் என்பன அடங்குகின்றன. மேலும் வடகொரியா முழுதும் சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். இதைவிட ஆண்டுக்கு 10 000 சிறைக் கைதிகள் கொல்லப் பட்டும் வருகின்றனர்.

இதைவிட வடகொரியாவில் வாழும் குடிமக்களுக்கு சுயமாகச் சிந்திப்பதற்கும், சமய சுதந்திரம், பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற சுதந்திரம் என்பனவும் பெருமளவு மறுக்கப் பட்டு வருகின்றன. இக்கட்டுப்பாட்டுக்களை நிறைவேற்று அதிகாரம் மிக்க அதிபரான கிம் ஜொங் உன்னின் தொழிலாளர் கட்சி மக்களிடையே திணித்து வருகின்றது.

மேலும் வடகொரியாவில் வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் மத்தியில் பட்டினி மற்றும் போசாக்கின்மை பிரச்சினையும் தலை தூக்கி உள்ளதாகவும் ஐ.நா சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் வடகொரியாவுக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டினர் கடத்தப் படுவது, காணாமற் போவது ஆகிய பிரச்சினைகளும் அங்கு இருப்பதாகவும் ஐ.நா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஊடகக் கவனம் பெற்று வரும் வட கொரிய மனித உரிமை மீறல்கள்:ஐ.நா அறிக்கை வெளியாகின்றது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com