Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப் பயணமானது 17.02.2014 இன்று 20வது நாளாக Saarbrücken நகரத்தில் ஆரம்பமாகி காலை 09:30 மணியளவில் பிரான்ஸ் நாட்டினுடைய எல்லையை சென்றடைந்தது. பிரான்ஸ் நாட்டினுடைய எல்லையில் பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகளும் பிரான்ஸ் காவல்துறையினரும் மனிதநேய பணியாளர்களை வரவேற்றார்கள்.

நடைபயணத்தில் ஈடுப்பட்டுள்ள மனிதநேய பணியாளர்களை Sarreguemines  நகரத்தில் ''பிரான்ஸ் 3'' என்ற தொலைக்காட்சி நடைப்பயணத்தை ஒளிப்பதிவு செய்தும் மனிதநேய பணியாளர்களை நேர்காணல் செய்தனர். மேலும் மனிதநேய பணியாளர்கள் Sarreguemines நகரபிதாவுடனான சந்திப்பில் ஈடுப்பட்டார்கள். இச் சந்திப்பை பிரான்ஸ் பத்திரிகை ஊடகம் பதிவுசெய்தது.

இன்றைய நடைப்பயண போராட்டத்தை பிரான்ஸ் ஊடகங்கள் பதிவு செய்ததால் தமிழர்களுடைய உண்மை தன்மையை பிரான்ஸ் மக்கள் உணர வழிவகுக்கும். இன்று இறுதியாக Sarre-Union  நகரபிதாவுடனான சந்திப்பிலும் மனிதநேய பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். 

தமிழின  அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய நடைப்பயணமானது 37 km தூரத்தை கடந்து Sarre-Union  என்ற நகரத்தில் நிறைவடைந்தது.

0 Responses to 20வது நாளாக ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com