மோதல் காலங்களில் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் இரண்டாம் கட்ட அமர்வு யாழ்ப்பாணத்தில் கடந்த 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் நடைபெற்றது. குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முதற்கட்ட அமர்வுகள் ஏற்கனவே கிளிநொச்சியில் நடைபெற்றிருந்தன.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களைக் கோரும் நடவடிக்கைகளில் சுமார் 240 பேர் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்ட போதிலும், இறுதி நாள் வரையில் 160 பேர் மாத்திரமே சாட்சியமளிக்க முடிந்தது.
அத்தோடு, காணாமற்போன தமது உறவினர்கள் தொடர்பில் புதிதாக சாட்சியமளிப்பதற்கு பல பொதுமக்கள் வருகை தந்திருந்த போதிலும், அவர்களிடம் பதிவுகளை மேற்கொண்டபின் பின்னொரு தருணத்தில் சாட்சியமளிப்பதற்கு அழைக்கப்படுவீர்கள் என்ற வாக்குறுதி ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.
மோதல் காலங்களில் காணாமற்போனவர்கள் தொடர்பில் மொத்தமாக 15,528 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ள காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு, ஆனாலும், சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் முறைப்பாடுகளைச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இராணுவம், ஈபிடிபி, கருணா குழுக்கள் மீது குற்றச்சாட்டுக்கள்
காணாமற்போனோரின் உறவினர்கள் அளித்த சாட்சியங்கள் அநேகமானவற்றில் இலங்கை இராணுவம், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) மற்றும் கருணா குழு ஆகியவற்றின் மீதே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
சாட்சியங்களின் பதிவுகள் சில
*கனகலிங்கம் ஜெயராஜ் தொடர்பில் அவருடைய தந்தையான செல்லத்துரை கனகலிங்கம் அளித்த சாட்சியம், “2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி, அதிகாலை 03.45 மணியளவில் என்னுடைய வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த இராணுவமும், ஈ.பி.டி.பி அமைப்பின் சில உறுப்பினர்களும் எனது மகனான ஜெயராஜை அடித்து துன்புறுத்தியதுடன் எங்களையும் அச்சுறுத்தினர். அதன் பின்னர் அவர்கள் என்னுடைய மகனை அழைத்துக் கொண்டு சென்றிருந்தனர். ஆனால், தற்பொழுது வரை எனது மகன் தொடர்பாக எந்தவொரு தகவலையும் என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு என்னுடைய மகன் வேண்டும். அவரை மீட்டுத் தாருங்கள்”
*விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் யோகரத்தினம் யோகியின் மனைவி வழங்கிய சாட்சியம், “எனது கணவர் யோகரத்தினம் யோகி இறுதி மோதல்களின் இறுதி நாளான மே 18, 2009இல் வட்டுவாகல் பகுதியில் வைத்து அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் முன்னிலையில் இராணுவத்திடம் சரணடைந்தார். என்னுடைய கணவருடன், நூற்றுக்கும் அதிகமான விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் இராணுவத்தினரால் பேரூந்தொன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அதனை நானும், பெருமளவான மக்களும் நேரில் பார்த்துக் கொண்டிருந்தோம்.
இறுதி மோதல்களின் போது 11,676 விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்ததாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அவர்களில் எனது கணவரும் ஒருவர் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையிலும் இது தொடர்பில் முறையிட்டும் இன்று வரையிலும் எனது கணவர் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவரை விடுதலை செய்யவேண்டும்.”
*பிரேமபாலன் திலீபன் தொடர்பில் அவருடைய தாயாரான உதயறஜனி அளித்த சாட்சியம், “2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதி இரவு 12.00 மணியளவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபொழுது, நாம் குடியிருந்த வீட்டின் கதவுகளை தட்டுகின்ற ஓசையைக் கேட்டு நாங்கள் அச்சத்தில் நடுங்கிய பொழுது, கதவுக்கு வெளியால் நின்றவாறு எம்மை அச்சுறுத்தி வீட்டின் கதவைத் திறக்க வைத்தனர். அதன் பின்னர் எனது மகனை விசாரணைகளுக்காக வருமாறும் அவரைத் தம்முடன் விடுமாறும் எமக்குத் தெரிவித்தனர். சுமார் 7 பேர் கொண்ட குழுவினர் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் எமது வீட்டிற்கு அன்றைய தினம் வந்திருந்தனர். நாம் எமது மகனை அழைத்துச் செல்ல வேண்டாம் கத்திக் குழறி அழுத பொழுதிலும், எனது மகனை அழைத்துச் சென்றனர். அப்பொழுது குறித்த நபர்கள் சிறிய கலண்டர் அளவுடைய அட்டை ஒன்றை எங்களிடம் தந்திருந்தனர். அப்பொழுது தாம் கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் என எமக்குத் தெரிவித்திருந்தனர்”
*பரமசாமி விவகரன் தொடர்பில் அவருடைய தந்தையாரான செல்லத்துரை பரமசாமி அளித்த சாட்சியம், “கடந்த 2007ஆம் ஆண்டு யூன் மாதம் 11ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் ஊடரங்குச் சட்டம் அமுலில் இருந்த பொழுது எமக்கு முன்பின் தெரியாத நான்கு மர்ம நபர்கள் வெள்ளை வான் ஒன்றில் தங்களுடைய முகத்தை கறுப்புத் துணியால் கட்டியவாறு என்னுடைய வீட்டிற்குள் மதிலின் மேலாக ஏறிப்பாய்ந்து உள்நுழைந்தனர். என்னையும், எனது மனைவியையும் கடுமையாகத் தாக்கிவிட்டு எனது மகனை கைவிலங்கு பூட்டி இழுத்துச் சென்றனர். எமது வீட்டில் அதிகாலை 04.30 மணியிலிருந்து 05.30 மணி வரை குறித்த நபர்கள் எம்மீது தாக்குதல் நடத்தி எம்மைத் துன்புறுத்தியபோது நாங்கள் எழுப்பிய அழுகுரலைக் கேட்டு அயலில் உள்ளவர்களும் இவர்கள் எமது வீட்டில் இருந்து சென்ற பின்னர் எனது வீட்டிற்கு வந்திருந்தனர். ஆனால் எனது மகனை இன்னமும் காணவில்லை. நான் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சகலரிடமும் முறையிட்டுள்ளேன். ஆனால் எனது மகன் தொடர்பான எந்தவொரு தகவலும் இன்னமும் கிடைக்கவில்லை. எனவே என்னுடைய மகனை தயவுசெய்து மீட்டுத் தாருங்கள்”
ஜனாதிபதி ஆணைக்குழுவின் மீதான அதிர்ப்தி
*காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது சாட்சியங்களிடம் முன்வைக்கப்படும் கேள்விகள் அனைத்தும் நிவாரணத்தைப் பெறுமாறு வலியுறுத்துவது போன்றே இருப்பதாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் உப தலைவர் அன்ரனி சாகாயம் தெரிவித்துள்ளார். அத்தோடு, மக்களுக்கு நீதியே தேவை நிவாரணங்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
*இலங்கை அரசாங்கத்தின் கீழான விசாரணைகளில் நம்பிக்கை கொள்ள முடியாது என்று அறிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், கிளிநொச்சி அமர்வுகளில் சாட்சியமளித்தவருமான அனந்தி சசிதரன் (எழிலன்), காணாமற்போனவர்கள் தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
குறிப்பு: மோதல் காலங்களில் அதிகமானோர் காணாமற்போயிருக்கக்கூடிய இடங்கள் என்று நம்பப்படும் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் எப்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்கள் பதிவு செய்யும் அமர்வுகள் நடைபெறும் என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

0 Responses to ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ் அமர்வும், காணாமற்போனோர் தொடர்பில் உறவினர்களின் சாட்சியமும்!