Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணமானது 23.02.2014 இன்று 26வது நாளாக 40 km தூரத்தை கடந்து  Biesheim நகரத்தை வந்தடைந்தது.

எதிர்வரும் 26.02.2014 அன்று தமிழர்களுடைய தேசிய விடுதலை இயக்கமாகத் திகழ்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி Luxembourgகில் அமைந்துள்ள ஐரோப்பாவினுடைய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. எனவே அன்றைய தினம் காலை 8:00 மணிக்கு முன்பாக அனைத்துத் தமிழ் மக்களும் ஐரோப்பாவினுடைய உச்ச நீதிமன்றத்தில் சமூகமளித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுடைய ஏகபிரதிநிதிகள் மட்டுமன்றித் தமிழினத்தின் நீதிக்காகப் போராடிய விடுதலை இயக்கமுமாகும் என ஐரோப்பாவினுடைய உச்ச நீதிமன்றத்திற்கு கூற வேண்டியது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரதும் வரலாற்றுக் கடமையாகவும் காலத்தின் கட்டாயமாக திகழ்கின்றது.நீதிமன்றத்தினுடைய முகவரி:Palais de la Cour de justice , Boulevard Konrad Adenauer, Kirchberg L-2925, Luxembourg   

நடைப்பயணத்தை முன்னெடுக்கும் மனிதநேயப் பணியாளர்கள் தமது ஐந்தம்சக் கோரிக்கையில் ஐந்தாவது கோரிக்கையாக „மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.“என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள் ஆகையால் நடைப்பயணத்தை முன்னெடுக்கின்ற மனிதநேயப் பணியாளர்களும் ஐரோப்பாவினுடைய உச்ச நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழின  அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் நாளை 24.02.2014 திங்கள் அன்று நோர்வே நாட்டினுடைய பாராளுமன்ற முன்றலில் தமிழ் வண்டி பரப்புரை ஊர்தி பயணம் ஆரம்பமாகி பல நாடுகளை ஊடறுத்து 10.03.2013 அன்று ஐ.நா.வினுடைய மனிதவுரிமை மன்றத்தை சென்றடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தற்கதாகும்.

0 Responses to 26வது நாளாக தொடரும் ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com