Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டப்பட்டபோது 02 மனித எலும்புக்கூடுகளுடன் ஆண்கள் கழுத்தினில் அணியும்  நாணய வடிவிலான அட்டியொன்றும் தடையப்பொருளொக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 28ஆவது தடவையாக இன்று வெள்ளிக்கிழமை புதைகுழி அகழப்பட்ட வேளையினிலேயே இத்தடையம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்து புதைக்கப்பட்ட ஒருவருடையதாக அது இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

மன்னார் நீதவான் முன்னிலையினில் மனித புதைகுழியை தோண்டும் பணி இன்றும் தொடர்ந்திருந்தது. இந்நிலையில், இன்றையதினத்துடனான மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட  09 எலும்புக்கூடுகளை இன்றையதினம் மீட்டு பொதி செய்து மன்னார் நீதவானின் உத்தரவுக்கமைய  மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.  இதுவரையில் 69 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளன. மேலும், மேற்படி  மனித புதைகுழியை மேலும் விரிவுபடுத்தும் முகமாக அருகிலுள்ள பற்றைகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.

0 Responses to மன்னார் புதைகுழியினில் தடயம்! எண்ணிக்கை 77 ஆனது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com