Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் வெற்றிகரமாக இன்று   Pijpelheide நகரத்தை வந்தடைந்தது. இன்றைய நாள் காலநிலை மழையும் குளிருமாக இருந்தபொழுதிலும் உறுதி தளராமல் தாய் மண்ணை மனதில் நிறுத்தி மனித நேயப்பணியாளர்கள் நடைபயணத்தை  தொடர்ந்தனர்.

நடந்து செல்லும் பாதையில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நான்கு மொழிகளில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.

நடைப்பயணம் செல்லும் பாதையில் தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உரிமையுடனும் மனிதநேய பணியாளர்களை ஆதரித்து பங்களித்தனர் . நகர இளையோர்கள் நடைப்பயணத்தில் இணைந்தும் கொண்டனர்.

ஐநா பேரணிக்கு உலகத் தமிழ் மக்கள் அலையென திரள திரு வேல்முருகன் அழைப்பு.

0 Responses to 8 ஆம் நாளாக தொடரும் ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com