கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது 81 வது பிறந்த தினத்தினை இன்று கொண்டாடுகின்ற நிலையினில் அவரை மஹிந்த உள்ளிட்ட பலரும் வாழ்த்தியுள்ளனர்.தற்போது இந்தியாவினில் குடும்பத்தவர்களுடன் தங்கியுள்ள அவரை மஹிந்த தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே இலங்கை திரும்பிய பின்னர் தன்னை சந்தித்துப்பேச கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை மஹிந்த அழைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.எனினும் ஜெனீவா கூட்டத்தொடருக்கு முன்னதாக எக்காரணம் கொண்டும் கூட்டமைப்பு மஹிந்தவை சந்திப்பதில்லையென வவுனியாக்கூட்டத்தினில் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to சம்பந்தருக்கு இன்று 81! மஹிந்தவும் வாழ்த்தினாராம்!!