ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், தாம் பங்கேற்கபது தொடர்பினில் எந்தவொரு முடிவினையும் இது வரை தான் எடுத்திருக்கவில்லையென வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எமது இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.
தான் ஜெனீவா செல்லப்போவதில்லையென கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை பற்றி கேள்வி எழுப்பிய வேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், தாம் பங்கேற்கபது தொடர்பினில் எந்தவொரு முடிவினையும் இது வரை தான் எடுத்திருக்கவில்லையென்றே தெரிவித்ததாகவும் ஆனால் வழமை போன்றே அவ்வூடகம் திரிபு படுத்தி செய்திகளை வெளியிட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
இதனிடையே குறித்த செய்தியினில் தமக்கு கடும் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமது அரசியல் நிலைப்பாடு காரணமாக தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பொறுப்புமிக்க அதிகாரி ஒருவர், தன்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ள அனந்தி சசிதரன், இந்த நிலையில், தமது உயிருக்கோ பாதுகாப்புக்கோ உத்தரவாதம் இல்லை என்றும் கூறியுள்ளார்.இந்த நிலையில் தாம் எவ்வாறு அமைதியான மனோநிலையில் ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்பது சாத்தியமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to ஜெனீவா பிரயாணம்! இன்னும் முடிவில்லையென்கிறார் அனந்தி!