Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட டில்லு குழுவைச் சேர்ந்த 9 பேர் யாழ்ப்பாணக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நகரினை அண்டிய தலையாளி ஞானவைரவர் ஆலயத்தின் மடத்தில் வைத்து  இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்து இயங்கும் குழு எனக் கூறப்படுகின்றது. யாழில் நடைபெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய  இவர்கள் கைது செய்யப்பட்ட போது இவர்களிடம் இருந்து இராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் 2 சீருடை உட்பட 3 வாள்கள், கத்திகள், 3 மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரையும் நேற்று மல்லாகம் நீதவானின் முன் முற்படுத்தப்பட்ட போது நால்வர் சரீர பிணையில் விடுவிக்கப்படதுடன் ஏனைய ஐவரையும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இடப்பட்டுள்ளது.

0 Responses to யாழில் டில்லு எனும் மற்றொரு குழுவாம்! 9 பேர் கைது! 4 பேர் பிணையில் விடுவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com