Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்நாடு, சேலத்தில் நேரு கலையரங்கத்தில் திருநங்கைகள் அழகிப்போட்டி -2014  நிகழ்ச்சியும்,  ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சியும் நடந்தது. அதில்  ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசின் இராணுவ அட்டூழியங்களை மிக தத்ரூபமாக நடித்து காட்டிய நிகழ்வும் நடந்தது.

சேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் சேலம் நேரு கலையரங்கத்தில் திருநங்கைகள் அழகிப்போட்டி - 2014 நிகழ்ச்சியும், ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நடுவராக திரைப்பட நடிகை அம்பிகா கலந்துகொண்டார்.

அரக்கரை அழிக்கும் காளி அவதாரம் பற்றிய திருநங்கை ஆட்டம் அரங்கத்தையே சிலிர்க்க வைத்தது. பலத்த கரகோசத்துக்கு இடையே ‘அநீதியை அழிக்க வேண்டி காளியின் அவதாரமே திருநங்கைகள்’ என்று விளக்கினர்.

அடுத்து ஈழ தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசின் இராணுவ அட்டூழியங்களை மிக தத்ரூபமாக நடித்து காட்டிய நிகழ்வும் நடந்தது.

அதில் ஈழ தமிழ் பெண்களை கூட்டு வன்புணர்வு செய்த சிங்கள கொடூரத்தையும், இறுதிப்போரில் இனப்படுகொலை நிகழ்த்திய சிங்கள பாசிச இராணுவ கொடூரத்தையும் நெஞ்சுறுக்க நடித்து காட்டினர் திருநங்கைகளும், அவர்களுக்கு துணை நின்ற ஆண் கலைஞர்களும்.

இந்த காட்சிகளின்போது அரங்கத்தில் திரண்டிருந்த பெரும்பான்மையோர் கண்கலங்கினர்.

இறுதியாக வந்தே மாதரம் பாடல் பின்னணியில் ஒலிக்க, இந்திய இராணுவம் வந்து சிங்கள இராணுவத்தை அழித்து இனி தமிழினம் அழியாமல் காப்பதாக காட்சியை முடித்தனர்.

பின்னர் திருநங்கைகள் அழகிப்போட்டி அரங்கேறியது. இறுதியாக வெற்றியாளர்களுக்கு நடிகை அம்பிகா பரிசுகள் வழங்கினார்.


0 Responses to ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்பிய திருநங்கைகள்! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com