Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில்  அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக வீரத் தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுப்பூர்வமாக ஆரம்பமான ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைபயணமானது பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி 30.01.2014 இன்று இணர்டாவது நாளாக  25km தூரத்தை கடந்து டோட்ரேக் நகரத்தை வைந்தடைந்தது.


1.   பல தசாப்தங்களாக, இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2.   ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3.   இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4.   பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5.   மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த திரு சூரி, பிரித்தானியாவைச் சேர்ந்த திரு சிவந்தன், யேர்மனியைச் சேர்ந்த திரு செந்தில்குமரன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு வித்தியானந்தன்  ஆகியோர் கடும் குளிர் காற்று எனக் காலநிலை சீராக இல்லாத சூழ்நிலையிலும் மாவீரர்களினதும் மக்களினதும் நினைவுகளை மனத்தில் பதித்து உறுதியோடு நடந்து வருகின்றனர்.  தமிழின  அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்படுகின்றது. நாளை தமிழ் உறவுகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணத்தில் பங்கெடுக்கும் நெதர்லாண்ட் நாட்டை சேர்ந்த சூரி, பிரித்தானியாவை சேர்ந்த சிவந்தன், யேர்மனியை சேர்ந்த செந்தில்குமரன் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வித்தியானந்தன்  ஆகியோரின் சனநாயகப் போராட்டம் வெற்றி அளிப்பதற்காகவும் அவர்களை வாழ்த்துவதற்காகவும் உலகத் தமிழ் மக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்: 0031684999900 மேலதிக தகவல் அறியத்தரப்படும்.

0 Responses to விடுதலை வேட்கையுடன் 2ம் நாளாக ஐ.நா. நோக்கி தொடருகின்ற நீதிக்கான நடைபயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com