கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) நூறு பேரணிகள் போனாலும், அது நல்லாட்சி அரசாங்கத்தையோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையோ பாதிக்காது என்று சுதந்திரக் கட்சியின் செயலாளரும், விவசாய அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பேரணி செல்ல முயற்சிப்பவர்களுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை. அவ்வாறு ஒரு பேரணி அல்ல நூறு பேரணி சென்றாலும் அதனால் அரசாங்கத்துக்கோ, சுதந்திரக் கட்சிக்கோ எவ்வித பாதிப்புகளுமில்லை.
நாம் பல பேரணிகளைக் கண்டுள்ளோம் குறிப்பாக வெஸாக், பொஸன், இருவன் வெலிசாய இவ்வாறு பலவற்றை கண்டுள்ளோம்.இதன்மூலம் சாதனைகளும் புரிய முடியும். ஆனால் தனியாக பாதயாத்திரை சென்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. சுதந்திரக் கட்சியின் அனுமதியின்றி கட்சியின் பெயரை பாவித்து பேரணி செல்வது சட்டப்படி குற்றம்.இவ்வாறு செல்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to கூட்டு எதிரணி 100 பேரணிகள் போனாலும் அரசாங்கத்துக்கு பாதிப்பில்லை: துமிந்த திசாநாயக்க