Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனீவா கூட்டத்தொடர் விவகாரம் உச்ச நிலையினைக்கண்டுள்ள நிலையில் ஒரே நாளினில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க தூதுவராலய உயர்மட்டப் பிரதிநிதிகள் மற்றும் ஜ.நாவின் அரசியல் விவகார பிரதிநிதியென பலரும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக வடக்கில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலையினை கவலையுடன் அவதானித்த இக்குழுக்கள் வடக்கினில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதான இலங்கை அரசின் பிரச்சாரத்தின் உண்மை தன்மையினை கண்டறிய முற்பட்டிருந்தனர்.

இன்று வருகை தந்திருந்த பிரிட்டிஸ் தூதர் குழுவினர் அண்மையினில் பிரிட்டிஸ் பிரதமர் கமரூன் வருகை தந்து பார்வையிட்ட சபாபதிப்பிள்ளை முகாமினை பார்வையிட்டுள்ளனர்.அங்கு மக்களுடன் அவர்கள் கலந்துரையாடியுமுள்ளனர்.

அமெரிக்க தூதவராலய அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர். குறிப்பாக அரசு நடத்திய கண்துடைப்பு காணாமல் போனோர் விசாரணைக்குழு அது பற்றிய காணாமல் போனோரது நிலைப்பாடு  படையினரது கொலை மிரட்டல் பற்றி குழுவினர் பலரையும் சந்தித்து பதிவுகளை செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மேரி ஜமசிட்டாவிடம்  இலங்கையில் ஜனநாயகம் பெயரளவில் தான் இருக்கின்றதென எடுத்துக்கூறியிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான அரசியல் விவகாரங்களுக்கான யு.என்.ஏயின் பணிப்பாளர் மேரி ஜமட்டா உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜென்ரல் ஜி.ஏ.சந்திரசிறியை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதனையடுத்து யாழ்.கோவில் வீதியிலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு முற்பகல் 11 மணியளவில் வருகைதந்த அவர்கள் வடக்கு மாகாண முதலiமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்தச்சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலில் எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். வடக்கு மாகாண சபைத்தேர்தலை நடத்திவிட்டதனால் இலங்கையில் ஜனநாயகம் வந்துவிட்டதாக கூறமுடியாது. இங்கு  ஜனநாயகம் பெயரளவில் தான் வந்துள்ளது. மாகாண சபை அமைந்த பின்பும் வடக்கிற்கு பல தடைகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது. மாகாண சபைக்கு அதிகாரங்களை பகிர்வதில் இருந்து பலவிடயங்களை எடுத்துக்கூறினோம் அத்தோடு இலங்கையின் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம் எனத்தெரிவித்திருந்தார்.

0 Responses to யாழில் நிரம்பி வழியும் ராஜதந்திரிகள்! ஓரே நேரத்தில் ஜ.நா மற்றும் அமெரிக்க பிரிட்டிஸ் தரப்புக்கள்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com