ராஜிவ் காந்தியின் கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு ராஜிவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நேற்றையதினம் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் அவர்கள் ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கவிருப்பதாக தமிழக அரசாங்கம் அறிவித்திரு;தது.
எனினும் இதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்.
பிரதமர் ஒருவரை கொலை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது விடயம் என்று அவர் தெரிவித்துள்ளார்.




0 Responses to தூக்குத் தண்டனை இரத்து! ராகுல் காந்தி எதிர்ப்பு!