புயலடிக்கின்றது என்று கரையொதுங்கியவன் எங்கள் நாட்டினை 1505 களிலேயே ஆகிரமிக்கத் தொடங்கினான் கறுவாப்பட்டைக்கும் ஏலக்காயுக்கும் ஏலம்போனது எமது நாடு 1948இல் இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும் நாட்களின் பின் இலங்கையின் ஆட்சியாளர்களினால் இன்றுவரைக்கும் நிலக்கொள்ளைகள் நின்றுவிடாது தொடர்ந்து கொண்டே உள்ளது சீறீலங்கா ஆட்சியாளர்களே ஆக்கிரமிப்பாளர்களாக மாறி தமிழர் நிலங்களை ஏப்பமிட்டுக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிந்த விடயம் இந்த நிலக்கொள்ளையில் நாம் விடுபட்டுக்கொள்வதினை விடுத்து மீண்டும் மீண்டும் நாம் ஏமார்ந்துபோகக்கூடாது குறிப்பாக இளையவர்கள் விழிப்பாக இருக்கவேண்டும்
16-02-2014 அன்று சுழிபுரம் மேற்கு கிராமத்திலே நடைபெற்ற ஒரு பொதுக்கூடம் சம்மந்தமாக சில விமர்சனங்களும் ஆலோசைனைகளும் இங்கே அம்மக்களுக்காக முன்வைக்கப்படுகிறது. இக்கூட்டமானது கூட்டப்பட்டதன் நோக்கம் சுழிபுரம் சவுக்கடி கடற்கரையினை அன்மித்த இடத்திலே குறித்த மக்களுக்கு சொந்தமான சுமார் 300 ஏக்கர் அளவிலான நிலம் உள்ளது இதனை அரசசார்பற்ற நிருவனம் ஒன்றிற்கு சில நிபந்தனைகளுடனான ஒரு ஒப்பந்த அடிப்படையிலே குத்தகைக்குக் கொடுக்கப்படுவதற்காக ஊர்மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறியும் நோக்கிலே கூட்டப்பட்டதாகும் குறித்த கிராமம் கடற்தொழிலையே முக்கியமாக நம்பியுள்ளமை இங்கே முக்கியமான விடயம்
சுழிபுரம் மேற்கு கிராம மக்களே உங்கள் கவனத்திற்கு
வரலாற்றில் நாம் விடும் தவறுகள்தான் பின் நாட்களிலே தலைவிதி என்று நாம் நொந்துகொள்ளும் அளவிற்கு எதிர்விளைவுகளை உண்டுபன்னுகின்றது. எனவே உங்களுக்குச் சொந்தமான குறித்த நிலத்திலே நீங்களே முதலீடு செய்து நீங்களே முதலாளிகள் ஆகலாம் இன்று கடத்தொழிலாளி ஒருவரின் நாளாந்த வருமானம் 300 ரூபாய் கூட சில நாட்களிலே கிடைப்பதில்லை இதற்கான காரனம் கடலிலே மீன்வளங்கள் இல்லை அனைத்துமே அழிக்கப்பட்டுவிட்டன எனவே குறித்த நிலத்திலே நீங்கள் விவசாயம் செய்ய முடியாதா? உங்களுக்காக உதவிகளை ஆலோசனைகளை வடமாகான விவசாய அமைச்சினூடக பெற்றுக்கொள்ளளாம்.
உங்கள் கிராமத்தில் எத்தனையோ வறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு இந்த நிலத்தினை பகிர்ந்து கொடுக்கலாம் இன்னும் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அவற்றினை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு இதனை தாரைவார்த்துக் கொடுக்காதீர்கள் இளையோர்களே பெரியவர்களே உங்கள் ஊர் முற்றிலும் கடற்தொழிலை மட்டுமே நம்பி வாழ்கின்றது. இங்கே சுமார் 750 குடும்பங்கள் வாழ்கின்றன இதில் எத்தனை வேலை இல்லாதவர்கள் இளையவர்கள் உள்ளனர். ஏன் இந்த நிலத்திலே தென்னை மரங்களை நாட்டக்கூடாது ஏன் விவசாயம் செய்யக்கூடாது முன்னுக்கு வாருங்கள் இளையவர்களே.
இன்று அதிகமான தனியார் நிறுவனங்களின் பின்னணியில் அரசாங்கமும் அமைச்சர்களும் உள்ளனர். ஏன் போதைமருந்து வியாபரத்திலும்கூட சில அமைச்சர்கள் உள்ளதாக அவ்வப்போது ஊடகங்களில் கசிந்துகொண்டிருக்கின்றது. இன்றைய ஆட்சியாளர்கள் எதை நினைத்தாலும் செய்துமுடிப்பார்கள் எந்த நம்பிக்கையிலே உங்கள் நிலத்தினை தனியார் நிறுவனத்திற்கு கொடுக்க நினைக்கின்றீர்கள் வெறும் வாக்குறுதிகளை நம்பி எம் நிலத்தின் வளங்களை இன்னொருவனுக்கு கொடுப்பதா?
குறித்த பகுதியிலே எத்தனையாயிரம் பனைமரங்கள் தென்னைமரங்கள் 1960களிலே நின்றன. ஆனால் இன்று அங்கே தென்னைமரங்கள் நின்றதற்கான அடையாளம் ஏதும் உள்ளதா? ஆங்காங்கே சில பனைமரங்கள் மட்டும் எஞ்சியுள்ளது இலங்கை கடற்படையினரினால் இன்று வரைக்கும் மண் அகழ்வும் பனைகள் தறிப்பதுமாய் தொடர்ந்துகொண்டே போகின்றது.
மீண்டும் அரசசார்பற்ற நிறுவனதிற்கு இதனை கொடுக்கும்போது விவசாயம் என்ற பெயரிலே அங்கே உள்ள அத்தனை பனைமரங்களும் தறிக்கப்படும். உங்கள் கிராமத்தில் வாழும் அத்தனை குடும்பங்களுமே இந்த நிலத்திலே நிற்கும் பனைமரங்களிடம் இருந்துதான் விறகுகளை பெற்றுக்கொள்கிறீர்கள். இவைகள் தறிக்கப்பட்டால் உங்கள் விறக்குத் தேவையினை பூர்த்திசெய்யுமா இந்த தனியார் நிறுவனங்கள்? இந்த நிலத்தினை நீங்கள் உதாரணமாக ஒரு 30 வருடமோ அல்லது 20 வருடமோ குத்தகைக்கு கொடுத்தால் அவர்களில் ஒப்பந்தக்காலம் முடியும்போது அந்த மண்ணின் பசளைகள் அத்தனையும் உறிஞ்சப்பட்டு காடுகள் மரங்கள் இல்லாத வெறும் புழுதிக்காடாக உங்கள் அடுத்த சந்ததியினை சென்றடையும்.
மிகவும் ஆழமாக சிந்தித்து செயற்படுங்கள் இது எங்கள் மண் இந்த மண்ணுக்காய் எத்தனை வீரர்கள் வீழ்ந்தார்கள் எத்தனை நரகவேதனைகளை அனுபவித்தார்கள் ஆனால் நாங்கள் சலுகைகளுக்கும் சில சுய இலாபங்ககுக்கும் இதை எவனோ ஒருவனுக்கு ஏன் குத்தகை என்ற பெயரிலே கொடுக்கவேண்டும் கிராமத்தில் உள்ள அத்தனை மக்களுக்கும் கோவில்களுக் கூ அதை பகிர்ந்து கொடுக்கலாமே நீங்கள் ஏன்
தனியார் நிறுவனத்துக்கு கொடுக்கவேண்டும்.
அவ்வாறு கொடுத்தால் அதன் எதிர்விளைவுகள் மிகமோசமாக இருக்கும் அதாவது உதாரணமாக இன்று வடக்கிலே புனரமைக்கப்படும் அதிகமான வீதிகள் தனியார் நிறுவனங்கள் தான் புனரமைக்கின்றன. ஆனால் அதிலே வேலை செய்யும் சாதாரண கூலி முதல் தொழில்நுட்பவியலாளர் வாகன ஓட்டுனர் என்று அனைவருமே தென்னிலங்கையினை சேர்ந்த குறிப்பாக சிங்களவர்கள் எங்களுக்காக செலவழிப்பதாக அரசாங்கம் கூறும் பணம் மீண்டும் தென்னிலங்கைக்கு செல்கின்றதினை இங்கே அவதானிக்க வேண்டும். அதுபோல இந்த நிலத்தினை விவசாயம் என்ற பெயரில் குத்தகைக்கு பெற்றுக்கொள்ளப்படும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் நிச்சயமாக தமிழர்களாக இருக்க வாய்பில்லை அப்படி இருந்தாலும் ஒரு சிலரை கண் துடைப்புக்காக இணைத்துகொள்ளலாம்.
வேலையாட்கள் என்ற பெயரிலே இங்கேவரும் தென்னிலங்கையாளர்கள் உங்கள் கடற்கரையோரங்களிலே குடிசைகளை போடலாம். நீங்கள் குத்தகைக்கு கொடுத்த நிலத்திலே வழிபாட்டுக்காக புத்தசிலைகளை வைக்கலாம். காலம் செல்ல விகாரையினையும் கட்டிவிடலாம். விவசாயம் என்ற பெயரிலே இன்னொரு மகாவலிதிட்டமாக இருக்கலாம். வேண்டாம் போதும் வரலாற்றிலே நாங்கள் பட்ட துன்பம் ஏமாந்ததும் ஏமாற்றப்பட்டதும் எங்களுடன் முடியட்டும் அடுத்த சந்ததியினை இதிலே சிக்கவைத்து விடாது விழிப்பாக செயற்படுவோம்.
0 Responses to சுழிபுரம் மேற்கு கிராம மக்களே உங்கள் கவனத்திற்கு!