விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படையினர் கையாண்ட தாக்குதல் முறைகள் தொடர்பில் அமெரிக்கா கேள்வி எழுப்பி இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுக்கான உதவி தூதுவர் நீசா பீஸ்வால், இலங்கை அரசாங்கத்திடம் இது சம்பந்தமான கேள்விகளை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகள் இயக்கம் பொது மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியதாக அரசாங்க தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அத்துடன் யுத்தத்தின் போது இராணுவத் தாக்குதல்களால் பொது மக்கள் கொல்லப்படவில்லை என்றும் அரசாங்கம் வாதிட்டு வருகிறது.
அப்படியானால், தங்களை பாதுகாத்துக் கொள்ளப் பொது மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியிருந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட போது, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது? என்று அவர் கேள்வி எழுப்பி இருந்ததாக கூறப்படுகிறது.
எனினும் அரசாங்கம் இதற்கு உரிய பதில் எதனையும் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to இறுதி யுத்தத்தில் படையினர் கையாண்ட தாக்குதல் முறைகள் குறித்து அமெரிக்கா கேள்வி!