Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர் வரும் மார்ச் மாதம் தொடக்கம் ஜெனீவாவில் ஆரம்பிக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையின் அமர்வு - ஈழத் தமிழர்களுக்கு ஒரு முக்கிய அமர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறி லங்கா அரசுக்கு எதிராக இரண்டு பிரேரணை கொண்டுவரப்பட்டு, அதை இதுவரை காலமும் சிறி லங்கா அரசு நடைமுறை படுத்தாது தொடர்ச்சியாக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பது, தமிழ் பெண்களை கட்டாய கருக்கலைப்புக்கு  உட்படுத்துவது, தமிழ் பகுதிகளில் சிங்கள மயமாக்கல்  என்று தொடர்ச்சியான இன அழிப்பை செய்து கொண்டிருக்கும் நிலையில், இந்த மார்ச் மாத அமர்வில் தொடர்ந்தும் சிறி லங்காவிற்கு கால அவகாசம் கொடுத்து தமிழர்களை முழுமையாக அழிப்பதற்கு வழி அமைத்து கொடுக்கப் போகிறார்களா அல்லது சர்வதேச சுயாதின விசாரணைக்குள் சிறி லங்காவை உட்படுத்த போகிறார்களா? என்பதே இன்றைய கேள்வி.

தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை விசாரிப்பது மட்டுமல்ல, இன்று தொடர்ச்சியாக நடைபெறும் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள், ராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப் பட வேண்டும் என்பதை ஈழத் தமிழர் மட்டுமல்ல உலகத் தமிழர் அனைவரும் ஒன்று சேர்ந்து  வலியுறுத்த வேண்டும்.

நான்கு ஈழத்தமிழ் தேசிய உணர்வாளர்கள் சர்வதேச குற்றவியல் நீதி அமைப்பு அமைந்துள்ள Den Haag (Holland) நகரில் இருந்து ஜெனீவாவை நோக்கி நடைபயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒஸ்லோ நகரில் இருந்து இருந்து தமிழ் வான் என்று ஒரு உருதி  தமிழ் இனப்படுகொலையை காட்சியாக கொண்டு ஐரோப்பிய நகரங்களை கடந்து ஜெனிவா நோக்கி செல்கிறது.

இவர்களுடன் சேர்ந்து பாரிஸ் நகரில் பிரான்சு வெளிவிவகார அமைச்சுக்கு அருகில் தொடர் போராட்டமாக இங்கு நாம் நடத்துவது முக்கியாமாக படுவதால் பெப்ரவரி 12 முதல் வாரம் தோறும் புதன் கிழமைகளில் மாலை 3 மணிமுதல் பிரான்சு அரசிடம் மனித வுரிமை சபை மற்றும் பாதுகாப்பு சபையிலும் தமிழ் மக்களுக்குரிய நீதியான தீர்வை முன் வைக்க கோரி போராட்டம் நடைபெறும்.

தமிழர்களாக ஒன்று கூடி போராடுவோம் - ஒன்று கூடுங்கள் எல்லோரும்.

0 Responses to ஜெனீவா பேரணிக்கு வலு சேர்க்க பிரான்சில் தொடர் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com