Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்தவை உலகை அதிர வைத்த சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டு வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்; நிகழ்த்திய உரை தொடர்பில்  மஹிந்த கடும் சீற்றமடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் குறித்த உரை தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

'கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம். சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின் முபாரக், ஈராக்கின் சதாம் {ஹசைன்,பாகிஸ்தானின் முஸாரப் ஆகியோர் இருந்த நிலை என்ன என்பதையும் இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்' என்று முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

வரணி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வில் அவர் ஆற்றிய உரை தொடர்பினில் இராணுவப்புலனாய்வு கட்டமைப்பு கோத்தாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. அதனை கோத்தா மஹிந்தவிற்கு எடுத்து கூறியிருந்ததாகத் தெரியவருகின்றது. மஹிந்தவை மறைமுகமாகச் சாடியே, வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக மஹிந்தவிற்கு  போட்டுக் கொடுத்ததன் அடிப்படையில் இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் நம்பகரமாக அறியமுடிகின்றது.

வடக்கு முதல்வர் மஹிந்த தரப்புடன் சுமுகமாக அரசியலை முன்னெடுக்க விரும்பிய போதும் அதற்கான சூழலை அரசு ஏற்படுத்தியிருக்கவில்லை. வாக்களித்த மக்களிற்கு உதவ முடியாது தொடர்ந்தும் முட்டுக்கட்டைகள் போடப்படுவதால் மனம் சலித்துள்ள முதலமைச்சர் குறித்த காலத்தினுள் முன்னேற்றம் ஏற்படாவிடின் தான் பதவி விலகுவது பற்றி நெருங்கிய தரப்புக்களிடம் பிரஸ்தாபித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

0 Responses to முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பேச்சு தொடர்பில் விசாரணைக்குப் பணிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com