இலங்கை மற்றும் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் விசேட சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்யவுள்ளார்.
அடுத்தமாத ஆரம்பத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புதுடில்கியில் இடம்பெற்ற இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னரும் சிறிலங்காவின் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்து, தடுத்து வைத்துள்ளனர்.
இது இந்திய மத்திய அரசாங்கத்தை அதிருப்தி அடைய செய்துள்ளது.
எனவே இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா இரண்டு நாடுகளின் மீனவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to மீனவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது? மத்திய அரசாங்கம் விசேட சந்திப்பாம்!