ஜெனீவா மாநாட்டின் போது சிறிலங்காவுக்குத் தெற்காசிய நாடுகளிடம் ஆதரவு கோரும் நோக்கில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று மாலைத்தீவுக்குச் செல்கிறார்.
மாலைதீவில் நடைபெறும் தெற்காசிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அங்கு செல்லும் அவர், அங்கு தெற்காசிய நாடுகளின் தலைவர்களை தனிதனியே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்தியா, பங்களாதேஸ்,பூட்டான், ஆப்கானிஸ்தான் நேபாளம், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய தெற்காசிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இன்று தொடங்கி எதிர்வரும் 20ம் திகதி வரையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டிக்கு மேலதிகமாக தெற்காசிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை தனிதனியே சந்தித்து, ஜெனீவா மாநாட்டின் போது சிறிலங்காவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to ஜெனீவாவுக்கு முன் தெற்காசிய நாடுகளிடம் ஆதரவு கோர பீரிஸ் பயணம்!