Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரிட்டன் இளவரசர் வில்லியம் தமது பக்கிங்ஹாம் அரண்மனையிலுள்ள யானைத் தந்தம் உட்பட விலங்குகளால் செய்யப் பட்ட 1200 பொக்கிஷங்களையும் அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவர் சமீபத்தில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்று சட்ட விரோதமாக வன விலங்குகள் வேட்டையாடப் படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருந்ததுடன் உலக மக்கள் விலங்குகளின் தோல், கொம்பு, தந்தங்கள் ஆகியவற்றால் செய்யப் படும் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

மேலும் இளவரசர் வில்லியம் வன விலங்குகள் சட்ட விரோதமாக வேட்டையாடுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஐ.நா உடன் தானும் இணைவதற்கு சம்மதம் தெரிவித்து இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தனது ஜீவ காருண்யத்தை வெளிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இந்தியாவில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு 19 ஆம் நூற்றாண்டில் கொண்டு வரப் பட்ட யானைத் தந்தங்களால் செய்யப் பட்ட பொக்கிஷங்கள் உட்பட 1200 பொருட்களை அழிக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் சட்ட விரோதமாகக் கடத்தப் படும் பல ஆயிரம் கோடிக் கணக்கான பவுண்ட்ஸ் பெறுமதியுள்ள வன விலங்குகளின் உறுப்புக்கள் கைப்பற்றப் பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to யானைத் தந்தம் உட்பட விலங்குகளால் செய்யப் பட்ட பொக்கிஷங்களை அழிக்க இளவரசர் வில்லியம் உத்தரவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com