அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நீஷா பீஸ்வால், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சரியான ஆய்வினை மேற்கொள்ளாமல் கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.அரசாங்கம் இலங்கையின் ஒருங்கிணைப்புக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.ஆனால் இந்த விடயங்களை சரியாக ஆய்வு செய்து விளக்கம் பெறாமல், நீஷா பீஸ்வால் கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பதால் எந்த விதமான் நனம்மையும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Responses to நீஷா பீஸ்வால் மீது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டு