Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனித உரிமை உரிமைகள் மாநாட்டுக்கு எதிராக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்த சில சிங்கள பேரினவாத அமைப்புகள், நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனீவா மாநாட்டின் போது இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவினால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிங்களவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்துக்கான சுலோகங்கள், பதாதைகள் என அனைத்தும் தயார் செய்துவிட்ட போதும், ஜெனீவா செல்வதற்கான நிதி இல்லாத நிலையில், அதனை இலங்கை அரசாங்கத்திடம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு எந்த பதிலையும் வழங்கவில்லை என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் நடத்த சிங்களவர்களுக்கு நிதி நெருக்கடியாம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com