Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

29.01.2014 அன்று நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பமான ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைப்பயணமானது வெற்றிக்கரமாக  08.02.2014 இன்று பதினொராவது நாளாக ௩௧KM தூரத்தை கடந்து பெல்யீயம் நாட்டில் உள்ள Somme-Leuze  நகரத்தை வந்தடைந்தது.

தொடர்ந்தும் மழையும் குளிருமாகச் சீரற்ற காலநிலையாக இருப்பதால் நடைப்பயணத்தை முன்னெடுக்கின்ற மனித நேயப்பணியாளர்கள் பல்வேறு வேதனைகளையும் துயரங்களையும் சுமந்து உறுதி தளராமல் தாய்மண்ணை மனதில் நிறுத்தி நடைப்பயணத்தை தொடர்கின்றனர்.

நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள மனித நேயப்பணியாளர்களுக்கு தனது ஆதரவை வழங்கும் முகமாக சீரற்ற காலநிலையானபோதும் பிரித்தானியா நாட்டில்  இருந்து வருகை தந்து தமிழ் இன உணர்வாளர்   ஒருவர்  நடைபயணத்தில் ஈடுபட்டு தனது  ஆதரவை வழங்கியுள்ளார். பெல்யீயம் வாழ் தமிழ் உறவுகளும் நடைபயணத்தை முன்னெடுக்கின்ற மனித நேயப்பணியாளர்களை உரிமையுடன் வரவேற்று அவர்களை உபசரித்து தமது தார்மிக ஆதரவை வழங்குகின்றார்கள்.

தமிழ் மக்களுடைய செயற்பாடுகள் தமக்கு மகிழ்வையும் புதிய உற்சாகத்தையும் தருவதாக நடைபயணத்தை முன்னெடுக்கும் மனித நேயப்பணியாளர்கள் அறியத்தந்துள்ளார்கள். நடந்து செல்லும் பாதையில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நான்கு மொழிகளில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.

0 Responses to தமிழரின் உரிமைக் குரலாக 11ம் நாளாகத் தொடருகின்ற நீதிக்கான நடைப் பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com