Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப் படுமானால், அதற்கான பொறிமுறையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை முன்வைக்க வேண்டும். அதுவே, சிறப்பானதான அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதோடு, சர்வதேச விசாரணை, ஐ.நா சபையின் மனித உரிமைப் பேரவையினூடு முன்னெடுக்கப்படும் போதே அது வலிமையானதாகவும் இருக்கும் என்று அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மனித உரிமைப் பேரவையினால் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டால் அதற்கான ஆலோசனைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்தும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கான பொறி முறையை ஐ.நா முன் வைப்பதே சிறப்பானது: கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com