Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒன்பதாம் ஆண்டு நினைவாக….

பதிந்தவர்: தம்பியன் 06 February 2014

மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு…

மட்டு ..அம்பாறை மண்ணும் மக்களும் மதிக்கின்ற உணர்வுமிக்க உண்மைத்துவமான அரசியல் பண்பாளன் …

கனிவான சிரிப்பும் ஆறுதலான வார்த்தைகளும் துன்பப்பட்டுவரும் எவரையும் மனம் நோகாமல் துயர் துடைத்து ஆற்றுப்படுத்தி விடும் தூய்மையான மனிதநேயன்

சிங்கள அரசின் குடியேற்ற ஆக்கிரமிப்பு எங்கள் வேலிக்கு எல்லையிட்டு எல்லைதேடி வந்தபோதெல்லாம் நீங்களே எங்கள் எல்லைக்கல்

உணர்வு மிக்க உங்கள் அரசியல் ஞானம் கண்டு அடக்க நினைத்த சிங்கள அரசு சிறைவாசம் ஆக்கியபோதும் உறுதியுடன் உள்ளிருந்து உரிமைத்துவ உணர்வையே வளர்த்துக்கொண்டீர்கள்

தமிழ் தேசிய விடுதலைப்போரின் வீச்சுக்கும் மக்கள் எழுச்சிக்கும் முன்னின்று உழைத்த உண்மைத்துவ உத்தமன்

போராளிகளும் மக்களும் வேறு அல்ல மக்களே போராளிகள் என்பதை உணர்த்தி நின்றது நீங்கள் சிந்திய குருதி உங்கள் அர்ப்பண வாழ்வும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் தளத்தின் மக்கள் எழுச்சிக்குரிய மைல்கல் ………………..

மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்து தன்னுயிர் ஈர்ந்த தங்களுக்கு தமிழீழ தேசியத்தலைவர் வழங்கிய அதி உன்னத மதிப்பளிப்பு மாமனிதர் ………………..

போற்றுகின்றோம் தந்தையே வணங்கின்றோம் தந்தையே இன்றைய இந்நாளில்……..

- தணிகைக்குயில்.


0 Responses to ஒன்பதாம் ஆண்டு நினைவாக….

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com