Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் கட்டப்பட்ட புதியத் தலைமைச் செயலகம் அரசு மருத்துவ சேவைக்குத் தயாராகி உள்ளது.

புதிய தலைமைச் செயலகத்தை, தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசு உயர்தர மருத்துவமனையாக்கத் திட்டமிட்டு  இருந்தார். அதன்படி மருத்துவமனை நோயாளி அறைகள், படுக்கைகைகள், நவீன மருத்துவ உபகரணங்கள் இவற்றை தயார் செய்துள்ளதோடு 3 பரிசோதனைக் கூடங்கள் வசதியும் செய்யப் பட்டு உள்ளது.

மேலும், மருத்துவமனைக்குத் தேவையான பல்வேறு துறை மருத்துவத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள், மற்ற பணியாட்கள் என்று திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து, பணியாளர்கள் தேர்வும் முடிந்த நிலையில், மக்களின் சேவைக்காக இந்த மருத்துவமனை செயல் பட வேண்டியது ஒன்றுதான் பாக்கி என்கிற நிலை இப்போது. இவ்வேளையில்தான்  இந்த மருத்துவமனையை வருகிற 21ம் திகதி மக்களுக்காக காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.

0 Responses to திமுக கட்டி எழுப்பிய புதிய தலைமைச் செயலகம் அரசு மருத்துவ சேவைக்குத் தயார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com