Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன அழிப்புக்கள் நடந்த அனைத்து நாடுகளிலும் இனப்படுகொலைக்குள்ளான மக்களிடம் அவர்கள் பிரிந்து செல்வதற்கான விருப்பு பற்றி சர்வதேச சமூகம் வாக்கெடுப்பு மூலம் அறிந்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே கோசோவா, தென் சூடான் மற்றும் கிழக்கு தீமோர் நாடுகள் தனிநாடாகின. அதே போன்றே எமது மண்ணிலும் நடந்தது இன அழிப்பு என்பது சர்வதேசத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதும் இங்கும் மக்களிடம் தனிநாட்டை அடைவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம்.

யாழ்.ஊடக அமையத்தில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  தெரிவிக்கையினில் கடந்த வடமாகாணசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட எனது மூன்று தீர்மானங்களும் ஜ.நா செயலாளர் நாயகம், மனித உரிமைகள் ஆணையாளர், அமெரிக்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்து தூதுவராலயங்கள் என அனைத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே வட-கிழக்கில் சிறிய சிறிய முகாம்களை மூடிவிட்டு படைத்தரப்பு மறுபுறம் பாரிய முகாம்களை விஸ்தரித்து வருவதாக தெரிவித்த அவர் படையினரது எண்ணிக்கை மாற்றமின்றி பேணப்படுவதையும் உறுதிப்படுத்தினார். அத்துடன் பலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதியின் நுழைவாயிலில் பலாலி வீதியில் கட்டப்பட்டுள்ள வரவேற்பு வளைவில் பலாலி இராணுவக்குடியிருப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாயின் அங்கு படையினரது குடியிருப்பு திட்டம் அமுல்படுத்தப்படப்போவது நிச்சயமாகியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to இன அழிப்பு தீர்மானம்! சர்வதேசமெங்கும் சென்றடைந்ததென்கிறார் சிவாஜி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com