Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் மர்மமான முறையினில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரிட்டிஸ் பிரஜையான விசுவலிங்கம் கோபிதாஸ்-43 வயது என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சியின் மந்திகையினை சொந்த இடமாக கொண்ட அவர் விடுதலைப ;புலிகளிற்கு நிதி உதவி வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இலங்கை வந்திருந்த நிலையினில் 2007 ம் ஆண்டின் மார்ச் மாதம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினில் வைத்து கைதாகியிருந்தார். இவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தொடர்ந்தும் பிரிட்டனிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஏழு வருடங்களாக குற்றச்சாட்டுக்கள் ஏதும் முன்னிறுத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டிருந்த  விசுவலிங்கம் கோபிதாஸ் இன்று சி பிரிவின் மலசலகூடத்தினில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் சக அரசியல் கைதிகள் தன்னிடம்கோரியிருப்பதாக வடமாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

கடந்த 2011ம் ஆண்டின் நவம்பர் இச்சிறையியில் இடம்பெற்ற கலவரத்தில் சிங்கள தண்டனை கைதிகளால் நிர்வாணமாக்கப்பட்டு கோரமாக சித்திரவதைகளிற்குள்ளான அவர் அப்போது படுகாயமடைந்து உயிர் தப்பியிருந்தார்.அதே போன்று 2012 ஜனவரியினில் இடம்பெற்ற மற்றொரு கொலை முயற்சியிலும் அவர் உயிர் தப்பியுள்ளார்.

தற்போது இவரது சடலம் வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

0 Responses to பிரிட்டிஸ் பிரஜையான தமிழ் அரசியல்கைதி மகசீனில் மரணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com