Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பிய ஒன்றியம் வழங்காத ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் வழங்காததாலும், இந்த விடயம் தொடர்பான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாததாலும், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை ரத்து செய்திருந்தது.

அதனை மீள்பித்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும், அது கைகூடி இருக்கவில்லை.

ஆனால் பாகிஸ்தான் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வரிச்சலுகையை அனுபவிக்கிறது.
இந்த நிலையில் இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களை, பாகிஸ்தான் ஊடாக, ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையுடன் ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதிக்கவுள்ளது.

இதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி செலவினம் குறைவடையும்.
அதேநேரம் பாகிஸ்தானுக்கான ஏற்றுமதிகளும் அதிகரிக்கும்.

0 Responses to ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச் சலுககையை பாகிஸ்தான் வழங்குவதாக அறிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com