யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளிமாவட்டங்களில் காணாமல் போயிருந்தாலும் அது குறித்த சாட்சியப்பதிவுகளையும் எதிர்வரும் வாரம் மேற்கொள்ளலாம் என யாழ். மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வாரம் 14 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதிவரை யாழ். மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் மஹிந்தவினால் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சாட்சியப் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு வேறு மாவட்டங்களில் வசித்து வந்தவர்களில் காணாமல் போனவர்கள் இருப்பின் அவர்கள் தொடர்பிலும் குறித்த நாட்களில் வருகைதந்து பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றார்.
0 Responses to யாழிற்கு வெளியே காணாமல் போனவர்களும் முறையிடலாம்! அரச அதிபர் தகவல்!